Advertisment

"இனி என்னை அப்படி கூப்பிடாதீங்க" - நடிகை பேச்சுக்கு குவியும் பாராட்டு

actress janani avoided caste name iyer

அறிமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் ‘வேழம்’. இப்படத்தில் கதாநாயகிகளாக ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளனர். 'கே 4 க்ரியேஷன்' சார்பாக கேசவன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜானு சந்தர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும்ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் 24 ஆம் தேதி ‘வேழம்’ படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அசோக் செல்வன், ஜனனி உள்ளிட்ட படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய ஜனனி,"‘வேழம்’ படம் சிறப்பாக வந்திருக்கிறது. ‘தெகிடி’ படத்தை தொடர்ந்து நான் இரண்டாவது முறையாக அசோக் செல்வனுடன் இணைந்து வேழம் படம் பண்ணியிருக்கேன். நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள் எனத்தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "உங்களிடம் ஒரு கோரிக்கை, நான் என்னுடைய பெயரை ஜனனின்னு மாற்றிவிட்டேன், இருந்தாலும் என்னைய எல்லாரும் ஜனனி ஐயருன்னுசொல்றிங்க. அப்படிகூப்பிடாதிங்க ஜனனின்னு மட்டும் சொன்னால் போதும் என்றார்.இதைக் கேட்ட அங்கத்தினர்கைதட்டி பாராட்டுகளைத்தெரிவித்தனர்.

Advertisment

tamil cinema Ashok Selvan Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe