Advertisment

சூர்யா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

Actress Hema Malini  return to kollywood in surya movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சூரி, வினய் ராய்உள்ளிட்ட பலரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை 2டி என்டர்டைன்மெண்ட்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="9e621885-3d02-406d-9d0b-04d61dc87b8c" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_67.jpg" />

Advertisment

இந்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஹேம மாலினி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாத்துறையில் நடனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பன்முக திறமைகொண்ட இவர், தமிழில் கடைசியாக 'ஹே ராம்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா -பாலா கூட்டணியில் உருவாகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். விரைவில் இதுகுறித்தஅதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MADHURA MP HEMA MALINI director bala actor surya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe