தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்குப் பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை ஆர்த்தி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்,"50 வருட உழைப்பு. தொண்டன் To CM. முடியாது என ஏளனம் செய்தவர்களின் முன் எடுத்துக்காட்டின் உதாரணமாக நிமிர்ந்து நிற்கிறீர். உளமார பெருமைகொள்கிறேன். இனி இந்த தமிழகமே உங்கள் குடும்பம். நல்லா பாத்துப்பீங்க. நம்பிக்கையிருக்கு" எனப் பதிவிட்டுள்ளார்.