gdgdegse

Advertisment

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டுவுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். இந்தநிலையில், இன்று (06/05/2021) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார், அவருக்கு வயது 74.

பாண்டுவின் இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், நடிகை ஆர்த்தி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "பாண்டு அங்கிள் மிஸ் யூ ஸோ மச். நீங்கள் எங்களை மிகவும் சிரிக்க வைத்தீர்கள். நன்றி. ஆத்மா நமஸ்தே ஓம் சாந்தி" என பதிவிட்டுள்ளார்.