
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருவதையடுத்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணமாகக் கலந்துகொண்டது, மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான புகார்கள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தப் புகார்களின் பேரில் கைதுசெய்யப்பட்ட ராஜகோபாலன், தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரைத்துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இச்சம்பவத்தைக் கண்டித்து கருத்துத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், இதுகுறித்து நகைச்சுவை நடிகை ஆர்த்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆசிரியர் பணி, அறப்பணி என்பதை மறந்து அசிங்கப் பணி செய்த கயவனுக்கு அரசு கொடுக்கப்போகும் தண்டனை இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதபடி கடுமையானதாக அமைதல் வேண்டும். நாளைய தலைமுறையை உருவாக்கும் பள்ளிகளில் பாலியல் என்பதே பெரும் கேவலம். அதற்கு அந்தந்தப் பள்ளியே பொறுப்பேற்க வேண்டும்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)