ஜி.வி.பிரகாஷ் பட டீசரை வெளியிட்ட நடிகை ஹன்சிகா

Actress Hansika released the teaser of GV Prakash!

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ளது '13' திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் விவேக் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சித்துகுமார் இசையமைக்க, சி.எம்.மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் யூ-டியூபர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல், இயக்குநர் கவுதம் மேனன் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில்ப்ரோமோஷன் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், '13' திரைப்படத்திற்கான டீசர் எப்போது வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில்தீபாவளியையொட்டிநேற்று (21/10/2022) மாலை 06.00 மணிக்குஅப்படத்திற்கான டீசரை நடிகை ஹன்சிகா மோத்வானி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த டீசர் தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

twitter
இதையும் படியுங்கள்
Subscribe