நடிகைகளுக்கு பாலியல் தொல்லை; ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பரபரப்பு

actress grace antony and saniya iyappan issue

மலையாளத்தில் நவீன் பாஸ்கர் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சட்டர்டே நைட்'. இப்படம் வருகிற அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகைகள் சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் கோழிக்கோடில் உள்ள ஷாப்பிங் மாலில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர்.

அப்போது அங்கு ரசிகர்கள் அதிகமாக கூடியிருந்தனர். அக்கூட்டத்தில் தங்களுக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளதாக நடிகைகள் இருவரும் தங்களது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் அந்த நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகை சானியா ஐயப்பன், "நிகழ்ச்சிக்குப் பிறகு, நானும் என் சக நடிகர்களில் ஒருவரும் வெளியேறினோம். அக்கூட்டத்தில் சிலர் என் சக நடிகையிடம் தவறாக நடந்துகொண்டார்கள், கூட்டத்தின் காரணமாக அவருக்குப் எதிர்வினையாற்ற கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு, இதேபோன்ற பெண் வெறுப்பு செயலை நானும் சந்தித்தேன்" என தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில் கோழிக்கோடு பாண்டிரங்கான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

Actress mollywood
இதையும் படியுங்கள்
Subscribe