actress Gayathri aka Dolly D Cruz passes away car accident

Advertisment

தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள டோலி காயத்ரி 'மேடம் சார் மேடம் அந்தே'என்ற வெப் தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர்கடந்த வெள்ளிக்கிழமை அன்று நண்பர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். அதன் பின் மாலையில் காயத்திரியும் அவரது நண்பர் ரத்தோட்டுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை அவரது நண்பர் ரத்தோட் ஓட்டி வந்துள்ளார்.

ஐதராபாத் கச்சிபெளலி அருகே கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரின் மீது மோதிவிபத்துக்குள்ளாகியது. இதில் சம்பவ இடத்திலேயே நடிகை காயத்ரிஉயிரிழந்துள்ளார். அத்துடன் அவ்வழியேசென்று கொண்டிருந்தஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளார். காரை இயக்கி வந்த ரத்தோட் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயத்ரிமற்றும் விபத்தில் பலியான மற்றொரு பெண்ணின் உடலையையும்கைப்பற்றி பிரேதபரிசோதனைக்குஅனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை காயத்திரியின் மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.