actress divya prabha alleges one fellows misbehaviour on flight

Advertisment

மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகை திவ்ய பிரபா. தமிழில் பிரபு சாலமனின் கயல், விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பையில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் சென்றுகொண்டிருந்த போது, சகபயணிபாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, "ஒரு நபர் குடிபோதையில் அவர் இருக்கையில் உட்காராமல், என்னுடைய பக்கத்து இருக்கையில் அமர்ந்தார். எந்த லாஜிக்கும் இல்லாமல் என்னுடன் இருகைக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்பு தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார். உடனடியாக அங்கிருந்த விமான பணிப்பெண்களிடம் சொன்னேன். அவர்கள் என்னுடைய இருக்கையை மட்டும் மாற்றிவிட்டார்கள். அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கொச்சியில் விமானம் வந்து சேர்ந்ததும் விமான அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகளிடமும் நடந்த சம்பவத்தைப் பற்றி கூறினேன். ஆன்லைன் மூலமாக போலீஸில் புகார் அளித்தேன்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் "பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.