மது போதையில் வாகனம் ஓட்டி போலீஸிடம் சிக்கிய நடிகை! 

vamshika

கர்நாடகாவை சேர்ந்த நடிகை வம்ஷிகா நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் குடிபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி மாட்டிக்கொண்டார்.

ஆற்காடு சாலையில் அதிகவேகமாக சென்ற அவரது காரை, அங்கிருந்த சில வாகன ஓட்டிகள் மடக்கி பிடித்தனர். இதனால் காரை விட்டு கீழே இறங்கி பொது மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் நடிகை.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடிகை வம்ஷிகா குடிபோதையில் இருப்பதை உறுதி செய்ததையடுத்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இன்று மாலை விசாரணைக்காக பாண்டி பஜார் காவல்நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, காரின் பதிவு எண் கர்நாடக பகுதியை சேர்ந்தது என்பதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தான் மது அருந்திருந்ததாகவும் ஆனால் சுய நினைவோடுதான் இருந்தேன். மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறுதான், ஆனால் உலகில் யாரும் செய்யாத தவறை நான் செய்யவில்லை என விளக்கமளித்தார்.

மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக காவல்துறையினர் ரூ.10,000 அபராதம் விதித்திருப்பதாக நடிகை வம்ஷிகா தெரிவித்தார்.

karnataka
இதையும் படியுங்கள்
Subscribe