பிரபல நடிகை கொடுத்த பாலியல் வழக்கில் புதிய திருப்பம்!

actress case against vijay babu new turning

மலையாள திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் விஜய் பாபு. இவர்மீது கோழிக்கோட்டை சேர்ந்த நடிகை ஒருவர் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறிதன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அதனை வீடியோ எடுத்து தன்னை அடிக்கடி மிரட்டி வருவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைதொடர்ந்து விஜய் பாபு தன் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகையின் பெயரை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பொது வெளியில் வெளியிட்டதால் விஜய் பாபுவின் மீது போலீசார் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த புகாரில் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நடிகர் விஜய் பாபு துபாய்க்கு தப்பித்து சென்றநிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படிபோலீஸ் அவருக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து நடிகர் விஜய் பாபு முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி நடிகர் விஜய் பாபுவை விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகும்படிஉத்தரவிட்டதோடு, மே 2 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த விஜய் பாபு நேற்று விசாரணை அதிகாரி முன் ஆஜராகி தன்தரப்பு வாதத்தை முன் வைத்தார். அதில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை அடிக்கடி எனது வீட்டிற்கு வருவார். அவரைபாலியல் வன்கொடுமை செய்யவில்லை, இருவரும் சம்மதத்துடன் தான் உறவு கொண்டோம். என் படத்தில் அந்த நடிகைக்கு வாய்ப்பு தரவில்லை என்பதால் என் மீது தவறான குற்றச்சாட்டைவைத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணைக்குஎனது முழு ஒத்துழைப்பையும் தருவேன்" எனக் கூறியுள்ளார்.

Actress
இதையும் படியுங்கள்
Subscribe