actress Bhumika Chawla speech

Advertisment

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகை பூமிகா. தமிழில் விஜய்க்கு ஜோடியாக பத்ரி படத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாக 'சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். மேலும் 2000ஆம் ஆண்டு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இப்போது துணை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அப்படி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கடந்த 21ஆம் தேதி வெளியான படம் 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்’. சல்மான் கான் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனமே பெற்று வருகிறது.

இந்த நிலையில் "ஹீரோக்கள் அவரின் வயது குறைந்தவருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது போல் ஹீரோயின்களும் அப்படி நடிக்கலாம்" என தெரிவித்துள்ளார். இதனை சமீபத்திய பேட்டியில் கூறிய அவர் இது குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "கமெர்ஷியல் படங்களில் பெரும்பாலும் மூத்த நடிகைகள் புறந்தள்ளப்படுகிறார்கள். ஹீரோக்கள் இன்னமும் ஹீரோக்களாகவே நடிக்கிறார்கள். ஆனால் நடிகைகள் அப்படி நடிப்பதில்லை. ஆண்களைப்போல பெண் நடிகர்களால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் சூழல் ஏற்படவில்லை. அது மிக அரிதாகத்தான் நடக்கிறது.

Advertisment

நிஜ வாழ்க்கையில் கூட வயது குறைந்த ஆணை பெண் திருமணம் செய்யும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் ஆண்கள் தங்களைவிட வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்தால் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். அது ஏன் என்பது புரியவில்லை. அதேபோல, தன் வயதில் பாதி வயதில் இருக்கும் நடிகையுடன் காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் ஆண்நடிகர்கள் நடிக்கிறார்கள். ஆனால் அதையே ஒரு பெண் நடிகை செய்தால் ஏற்று கொள்வார்களா?. நான் என் மகன் வயதுள்ள ஒரு நடிகருடன் காதல் காட்சிகளில் நடிக்க முடியும்" அதை ஏற்றுக்கொள்வார்களா?. இந்த பேட்டியில் சற்று வேதனை கலந்த கோபத்துடன் பூமிகா பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது பேசு பொருளாகியுள்ளது.