Skip to main content

கோல்டன் விசா - நடிகை பாவனாவை கவுரவித்த அமீரகம்!

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

actress bhavana has been granted golden visa uae

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான், பார்த்திபன், நாசர், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் நடிகை பாவனாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதே போல் நடிகைகள் ஊர்வசி ரவுடேலா, மீரா ஜாஸ்மின், அமலாபால், திரிஷா, ராய் லட்சுமி, காஜல் அகர்வால் உள்ளிட்ட சிலரும் கோல்டன் விசா வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினியைக் கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
rajini gets golden visa of uae

ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் வகையில் கோல்டன் விசா வழங்கி வருகிறது. இதில் தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியல் துறை, திரைத் துறை, விளையாட்டுத் துறை உள்ளிட்ட பல துறைகள் உள்ளடங்கும். இந்த கோல்டன் விசாவைப் பெறுபவர்கள் 10 வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாகக் கருதப்படுவர். 

இந்த கோல்டன் விசாவை இந்தியத் திரைத்துறையைச் சார்ந்த பல முன்னணி பிரபலங்கள் வாங்கியுள்ளார்கள். இந்தியில் ஷாருக்கான், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும், மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும், தமிழில் கமல்ஹாசன், விக்ரம், பார்த்திபன், சிம்பு, விஜய் சேதுபதி, யுவன் ஷங்கர் ராஜா, த்ரிஷா, ஆண்ட்ரியா, மீனா உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளார்கள். 

இந்நிலையில், ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இது தொடர்பாக பேசிய ரஜினி, “யு.ஏ.இ அரசாங்கத்திற்கு எனது நன்றி. பின்பு என்னுடைய நண்பர், லூலு குரூப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யூசப் அலி. அவர் இல்லாமல் இந்த கௌவரம் கிடைத்திருக்காது” என்றார். சமீபத்தில் யூசப் அலியுடன் ரஜினி சந்திக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் தற்போது த.சே.ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக லோகேஷ் கனகரஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளார். 

Next Story

“மிகவும் பயமாக உள்ளது” - பாவனா வேதனை

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
bhavana about his case

தமிழில் ‘சித்திரம் பேசுதடி’, 'வெயில்', 'தீபாவளி', 'ஜெயம்கொண்டான்' என பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் பாவனா. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வந்த பாவனா அவருடைய தனிப்பட்ட வாழ்வில் நடந்த சில சம்பவங்களால் தொடர்ச்சியாக நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 

இதையடுத்து சமீப காலமாக மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ச்சியாக மலையாள மற்றும் கன்னடப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக இவர் நடிப்பில், கேஸ் ஆஃப் கொண்டனா என்ற கன்னடப் படம் கடந்த ஜனவரி 26ஆம் தேதி வெளியானது. இப்போது பிங்க் நோட் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் ஹண்ட், நடிகர், தி டோர் என்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் நடிகர் மற்றும் தி டோர் தமிழிலும் வெளியாகவுள்ளது.   

இந்த நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில், “இது அநியாயம் மற்றும் அதிர்ச்சி” என்ற தலைப்பில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எனது வழக்கு தொடர்பான மெமரி கார்டின் ஹாஷ் மதிப்பு பலமுறை மாற்றப்பட்டு இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நீதிமன்றத்தில் எனது தனியுரிமை தற்போது பாதுகாப்பாக இல்லை. இதை அறிந்து மிகவும் பயமாக உள்ளது. பாதிக்கப்பட்டவரின் நீதியை பலப்படுத்த வேண்டிய நீதிமன்றத்தில் இப்படியொரு அசம்பாவிதம் நடப்பது வேதனைக்குரியது.

இருப்பினும், நேர்மையான நீதிபதிகளின் காலம் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையுடன், எனக்கு நீதி கிடைக்கும் வரை எனது போராட்டத்தை தொடர்வேன். ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடைசித் தூணாக இருக்கும் நமது நீதித்துறையின் புனிதம் பாதிக்கப்படாது என்ற நம்பிக்கையுடன் எனது பயணத்தைத் தொடர்வேன்” என குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 2017ல் பாவனா, தனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக புகார் கொடுத்தார். அந்த வழக்கில், மலையாள நடிகர் திலீப் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் சாட்சியமாக மெமரி கார்டு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.