பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கான் நடித்த ஃபேன் படத்தில் நடித்திருந்தவர் ஷிகா மல்கோத்ரா. தற்போது நடிப்பை விட்டுவிட்டு தற்காலிகமாகச் செவிலியர் பணியில் இணைந்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருசிலர் கரோனா பாதிப்பிற்கு எதிராகப் போராட தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை ஷிகா மல்கோத்ரா செவிலியர் பணியை மீண்டும் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கையில், “வர்த்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் முறைப்படி செவிலியர் படிப்பு படித்த நான் 5 வருடம் மருத்துவமனையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. ஒரு நடிகையான என்னை உற்சாகப்படுத்தியது போன்று இந்த நர்ஸ் பணியிலும் தன்னை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.