Advertisment

“படத்தில் நடிக்க எனக்கு ஒரு ரூபாய் சம்பளம் போதும்”- நடிகை ஆர்த்தி அதிரடி!

art

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனிடையே பலரும் மக்களுக்குத் தங்களால் முடிந்த அளவுக்கு உதவி வருகின்றனர். பல நடிகர்கள் தங்களின் அறக்கட்டளை வாயிலாக மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அளித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நெருக்கடியான சமயத்தில் ஒருசில பிரபலங்கள் முடங்கியிருக்கும் சினிமா துறைக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25% குறைத்துக்கொண்டார். ஹரிஷ் கல்யான் தனது சம்பளத்தில் 50% குறைத்துக்கொண்டார். இதுபோல பலரும் சூழ்நிலை அறிந்து செயல்பட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நடிகை ஆர்த்தி, “இந்த வருடம் முழுவதும்தான் நடிக்க ஒப்பந்தமாகும் படத்திற்கு ஒரு ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும், எனக்கு கொடுக்கும் சம்பளத்தை வைத்து மேலும் துணை கலைஞர்களை ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு தாருங்கள்” என்று அறிவித்துள்ளார்.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe