Skip to main content

ரியல் மாறனை சந்தித்த பொம்மி

 

actress aparna balamurali meet captain gr gopinath

 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் 68-வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் ஐந்து விருதுகளை வென்றது. இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 

 

இந்தியில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்க சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அண்மையில் நடந்த படப்பிடிப்பில் சுதா கொங்கராவுக்கு கையில் அடிபட்டதால் ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், 'பொம்மி' கதாபாத்திரத்திற்காக தேசிய விருது வாங்கிய அபர்ணா பாலமுரளி, கேரளா திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மத்ருபூமி இலக்கிய விழாவில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், அதற்கு அபர்ணா பாலமுரளி தற்போது நன்றி தெரிவித்துள்ளார். மேலும், "உங்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டது பெருமையான தருணம் சார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.