பெங்காலி திரைத்துறையை சேர்ந்தவர் நடிகை அனுஷ்கா மோனி மோகன் தாஸ். 41வயதான இவர் நடிப்பதற்கு முன்பு மாடலாகவும் இருந்துள்ளார். மேலும் பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

Advertisment

மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் உள்ள போலிஸூக்கு நடிகை அனுஷ்கா மோனி விபச்சார தொழிலை நடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் இரண்டு நபர்களை போலிஸார் நடிகையிடம் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் போல் பேச சொல்லியுள்ளனர். அவர்கள் பேசியபோது, காஷ்மிராவில் உள்ள மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு வணிக வளாகத்தில், தன்னை வந்து சந்திக்குமாறு நடிகை கூறியுள்ளார். 

நடிகை சொன்னது போல் வணிக வளாகத்திற்கு சென்ற இருவரும் நடிகையை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இருவரிடமும் அந்த நடிகை பணம் பெற்றுள்ளார். உடனே அருகில் இருந்த காவல் துறையினர் நடிகையை கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் இரண்டு வங்காள நடிகைகளையும் மீட்டனர். இந்த இரண்டு பேரும் வங்காள சீரியல்களிலும் சினிமாலிலும் நடித்து வந்திருந்தவர்கள். பணக்காரர்களுக்கு பெண்களை அனுப்பும் இடைத்தரகராக நடிகை இருந்து வந்ததிருந்தது தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக நடிகையை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, இவரது பின்புலத்தில் வேறுயாராவது இருக்கிறார்களா, அல்லது பெரிய நெட்வொர்க் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகையைத் தவிர்த்து பார் ஓனர்கள், மேலாளர்கள், சர்வர்கள் என 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.