மலையாள படமான 'பிரேமம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாரசிகர்களுக்கு அறிமுகமானவர் அனுபமாபரமேஸ்வரன். இவர்தமிழில்தனுஷ்நடிப்பில் வெளியான 'கொடி'படத்தின்மூலம் அறிமுகமானார். தற்போது தள்ளிப் போகாதே என்னும் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Advertisment

anupama parameshwaran

தெலுங்கு தமிழில் பிஸியாகநடித்து வரும் அனுபமா பரமேஸ்வரனின் பேஸ்புக்தளத்தைஹேக்செய்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஹேக் செய்யப்பட்ட அந்த அக்கவுண்டில் அனுபமாவின் மார்பிங்புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

Advertisment

இதனால் சைபர் க்ரைமில்அனுபமா பரமேஸ்வரன் புகார் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாகஅனுபமா தனது இன்ஸ்டா பதிவில்தெரிவித்திருப்பது. "இந்த முட்டாள்தனங்களுக்கு எல்லாம் நேரமிருக்கும் அருவருப்பான நபர்களுக்கு, உங்கள் வீட்டில் அம்மா, சகோதரி இல்லையா? உங்கள் மூளையை இது போன்ற முட்டாள்தனங்களுக்குப் பயன்படுத்தாமல் ஆக்கபூர்வமான விஷயங்களில் பயன்படுத்துங்கள். இதைத் தெளிவுபடுத்த விரும்பினேன்" என்று பதிவிட்டுள்ளார்.