"தொல்லை தாங்க முடியாமல் போலீசுக்கு சென்றேன்" - தயாரிப்பாளர் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

actress anjali nair producer issue

மலையாள திரையுலகை சேர்ந்தவர் அஞ்சலி நாயர். அங்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு பல படங்களில் முக்கியக்கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். தமிழில் ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில், வில்லன் நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்ய முயன்றதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் தமிழ் நன்றாகபேசத்தெரியும். அதனால் தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். என்னுடைய முதல் தமிழ் படத்தில் நடித்த போது அந்தப் பட வில்லன் நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார்.

அந்தப் படத்தில் அவர் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்ததால் படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் தன்னை வெளியே செல்ல அனுமதிக்காமல், தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். பின்பு தன்னை காதலிப்பதாகக் கூறி நான் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்தார். ஒரு முறை தன்னை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சித்தார். மேலும், பல்வேறு வகையில் எனக்கு தொல்லை கொடுத்தார். தொல்லை தாங்க முடியாமல் போலீசுக்கு சென்றேன். அதன் பிறகு கேரளாவுக்கு திரும்பி போய்விட்டேன்" என்றார். இவரது குற்றச்சாட்டு தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

அஞ்சலி நாயர்கடந்த 2011 ஆம் ஆண்டு அனீஷ் என்ற இயக்குநரை திருமணம் செய்தார். பின்பு சில காரணங்களால் விவாகரத்து பெற்றார். இவர்களுக்குஒரு மகள் உள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு அஜித் என்கிற உதவி இயக்குநரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.

Actress film producer
இதையும் படியுங்கள்
Subscribe