/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/151_18.jpg)
கேரளாவைச் சேர்ந்த அனிகா விக்ரமன் தமிழில் 'க்' படம் மூலம் அறிமுகமாகிறார். பின்பு 'விஷமக்காரன்', 'எங்க பாட்டன் சொத்து' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தனது முன்னாள் காதலன் தன்னை அடித்து துன்புறுத்தியதாகக் கூறி போலீசில் புகார் கொடுத்துள்ளதாக அனிகா விக்ரமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களைத்தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "துரதிர்ஷ்டவசமாக அனூப் பிள்ளையுடன் சில வருடங்களாக காதலில் இருந்தேன். அவர் என்னை மனரீதியாகவும் இறுதிவரை உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளார். இவ்வளவு மோசமான ஒரு மனிதரை இதுவரை சந்தித்ததில்லை. அவர் எனக்கு இப்படி செய்வார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அவர் என்னை அடித்த 2வது முறை பெங்களூரில் உள்ள போலீசாரிடம் புகார் அளித்தேன்.முதல் முறை சென்னையில் அடித்தார். அப்போது என் காலில் விழுந்து அழுதார். அதனால் புகார் கொடுக்காமல் விட்டுவிட்டேன். அது நான் செய்த முட்டாள்தனம். 2வது முறை அடித்தது தொடர்பாக புகார் கொடுத்தும் எந்தப்பயனும் இல்லை. அவர் காவல்துறையினருக்கு பணம் கொடுத்ததால்அவர்கள் இந்த விஷயத்தை தீர்த்து வைக்கும்படி என்னிடம் கேட்டார்கள்.
இதனால் மீண்டும் தன்னை தாக்கினார். நான் இத்தனை வருடங்கள் சூழ்ச்சி செய்யப்பட்டு பலமுறை ஏமாற்றப்பட்டேன் அதனால் அவனை விட்டு விலக வேண்டியதாயிற்று. நாங்கள் நண்பர்களாக இருந்ததால் எனக்கும் சந்தேகம் வரவில்லை. நான் படப்பிடிப்புக்கு செல்லக்கூடாது என்பதற்காக எனது ஃபோனை உடைத்துவிட்டார். நாங்கள் காதலில் இல்லாதபோதும் எனது வாட்ஸப்பைஅவரது லேப்டாப்பில் இணைத்து அதைப் பார்த்துள்ளார். அவர் இணைத்தது எனக்கு தெரியாது. இதையடுத்து தொடர்ந்து என்னை கடுமையாக தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டினார். எல்லோரையும் மன்னிப்பதில் நான் நம்புகிறேன்.ஏனென்றால் வாழ்க்கை குறுகியது என்று எனக்குத் தெரியும்.ஆனால் இந்த மனிதனை நான் மறந்துவிட்டேன்;நான் கர்மாவை உறுதியாக நம்புகிறேன். போலீசில் புகார் செய்துள்ளேன்.
அவர் தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் தலைமறைவாக உள்ளார். எனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக இதைப் பதிவிடுகிறேன். இறுதியாக நான் முழுமையாக குணமடைந்துவிட்டேன்;மீண்டும் படப்பிடிப்பில் பணிபுரிந்து வருகிறேன்." எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)