Advertisment

விஜய் பட நடிகைக்கு கடைசி வாய்ப்பளித்த நீதிமன்றம்

actress ameesha patel check bounce case update

Advertisment

பிரபல பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல், தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் நடித்தவர். குணால் குரூமர் என்பவருடன் இணைந்து 'டெசி மேஜிக்' (Desi Magic) என்ற இந்தி படத்தை தயாரிக்க முடிவு செய்து, அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கியிருக்கிறார்.

அப்போது 2018ல் இப்படம் திரைக்கு வந்துவிடும் என்றும் அப்போது பணத்தை திருப்பி தந்து விடுகிறேன் என்றும் அமீஷா கூறியுள்ளார். பின்பு 2013ல் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால், இவர்கள் திட்டமிட்டபடி படம் முடிக்கப்படவுமில்லை திரைக்கும் கொண்டு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். வாங்கிய கடன் பணத்துடன் வட்டியையும் சேர்த்து ரூ.2.5 கோடி மற்றும் ரூ.50 லட்சம் என இரண்டு செக் அமீஷா பட்டேல் கொடுத்துள்ளார். அமீஷா கொடுத்த செக்கை அஜய் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சியான அஜய், நீதிமன்றத்தை நாடி, அமீஷா பட்டேல் மற்றும் குணால் குரூமர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமீஷா பட்டேலுக்கு பல தடவை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அமீஷா நீதிமன்றத்தில் ஒருமுறை கூட ஆஜராகாததால் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விசாரணையில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நடந்த விசாரணையில் அமீஷா பட்டேல் மற்றும் குணால் குரூமர் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ராஞ்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Advertisment

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 17 ஆம் தேதி அமீஷா பட்டேல் நீதிமன்றத்தில் ஆராஜனார். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி, ஜூன் 21 ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி தெரிவித்தார். ஆனால் இன்று நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை. மொஹாலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவசரமாக பங்கேற்றதால் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. அவரது வழக்கறிஞர் இன்னும் சிறிது கால அவகாசம் கேட்டு நீதிபதியிடம் கேட்டார். இதையடுத்து ஜூலை 10 ஆம் தேதி நடிகைக்கு கடைசி வாய்ப்பாக ஆஜராகுமாறு தெரிவித்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

ameesha patel
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe