அம்மாவாகும் பிரபல நடிகை...

சின்னத்திரையில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் ஆல்யா மானசா. இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் ராஜா ராணி சீரியலில் நடித்திருந்தார். இந்த ஜோடி மக்களிடையே பிரபலமடைந்தது. திரையில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் காதல் இவர்களுக்குள் மலர்ந்தது.

alia manasa

சமூக வலைதளங்களில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசாவிற்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு எளிமையான முறையில் 2 மாதங்களுக்கு முன்பே திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக அறிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தொலைக்காட்சியில் நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றனர். பொது மேடையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

Actress Pregnant
இதையும் படியுங்கள்
Subscribe