Skip to main content

தொடரும் மரணங்கள்.. மீண்டும் ஒரு தமிழ் பட நடிகை தற்கொலை

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

actress akanksha mohan passed away

 

நடிகைகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வாய்தா பட நடிகை தீபிகா தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு தமிழ் பட நடிகை தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

 

இளம் நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் மும்பையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியில் ஒரு சில படங்களில் நடித்துள்ள அகன்ஷா மோகன் தமிழில் 9 திருடர்கள் படத்தில் நடித்துள்ளார். கடந்த வாரம் இந்தியில் வெளியான சியா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

கடந்த புதன்கிழமை மும்பையில் உள்ள வெர்சோவா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடிகை அகன்ஷா மோகன் இரண்டு நாட்களுக்கு அறை எடுத்து  தங்கியுள்ளார். ஆனால் இரண்டு நாட்களாகியும் அகன்ஷா மோகன் தங்கியிருந்த அறை திறக்கப்படாததால், சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று பார்த்த போது, நடிகை அகன்ஷா மோகன் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

 

இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் நடிகை அகன்ஷா மோகன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், “என்னை மன்னித்துவிடுங்கள். எனது இறப்புக்கு யாரும் காரணமில்லை, நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு அமைதி மட்டுமே  தேவை”  என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே நடிகை அகன்ஷா மோகன் கடந்த சில நாட்களாக மன அழுத்ததில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

குழந்தை விவகாரம் - நடிகை கைது!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
sonu srinivas.gowda child issue

பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை சோனு ஸ்ரீநிவாஸ் கௌடா. கன்னட பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலமும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் பிரபலமானவராக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், அவ்வப்போது ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும்படியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அந்த குழந்தையை அவர் தத்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அக்குழந்தையை சட்ட விரோதமாக சோனு ஸ்ரீனிவாஸ் கௌடா தத்தெடுத்துள்ளதாக குழந்தைகள் நலத்துறை சார்பில் காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்குழந்தையின் அடையாளத்தை நடிகை வெளிப்படுத்தியதாகவும், மார்ச் மாதம் தேர்வு இருந்தும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையில், குழந்தைக்கும் தத்தெடுப்பவருக்கும் 25 வயது இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் இருக்கும் நிலையில் அக்குழத்தைக்கு 8 வயது என்றும் நடிகைக்கு 29 என்றும் மனுவில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.  

இந்த புகாரின் அடிப்படையில் நடிகையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரை விசாரித்த போது, குழந்தை தத்தெடுக்கும் முறையை முழுமையாக பின்பற்றவில்லை என்று ஒப்புகொண்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பின்பு நடிகையை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.