Advertisment

நடிகை தற்கொலை விவகாரம் - காதலன் மீது தாயார் பகீர் குற்றச்சாட்டு

actress  akanksha dubey case update

பிரபல போஜ்புரி நடிகை ஆகன்ஷா துபே (25) கடந்த 26ஆம் தேதி (26.03.2023) உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அங்கு அவர் நடித்து வந்த ‘லைக் ஹூன் மெயின் நலைக் நஹீன்’ என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றார். திரைப்படங்கள் அல்லாது பல இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு, அவரது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் நடனமாடிய படி வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நேரலையில் ரசிகர்களிடம் பேசிய அவர் அழுது கொண்டிருந்தார். அடுத்த நாள் அவர் இறந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து உத்தரப் பிரதேசம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துள்ளதாகத்தகவல் வெளியானது. மேலும் சம்பவ இடத்தில் இறப்பிற்கான கடிதம் எதுவும் தென்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் ஆகன்ஷா துபேயின் தாயார் மது துபே, தனது மகளின் மரணத்திற்கு இரண்டு பேர்தான் காரணம் என்று கூறியுள்ளார். சமர் சிங் மற்றும் சஞ்சய் சிங் மீது குற்றம் சாட்டியுள்ளார். சமர் சிங்கின் சகோதரர் சஞ்சய் சிங், ஆகன்ஷா துபேயைக் கொன்று விடுவதாக மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை என கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து வாரணாசி போலீசார், இந்த வழக்கு தொடர்பாக சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகை ஆகன்ஷா துபே நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங்குடன் காதலில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe