Advertisment

வரிசைகட்டும் பட வாய்ப்புகள்; அடுத்த படத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

Advertisment

actress Aishwarya Rajesh new film announcement

'காக்காமுட்டை' படத்தின் படத்தின் மூலம் பலரின் கவனத்தை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மலையாளத்தில் ஹிட்டடித்த தி கிரேட்இந்தியன் கிச்சன்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனைத்தொடர்ந்து 'டிரைவர் ஜமுனா', 'தீயவர் குலைகள் நடுங்க', 'மோகன்தாஸ்துருவ' நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆர் ஜே பாலாஜியுடன் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி சார்லஸ் இயக்கும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இவருடன் லட்சுமி பிரியா, சுனில் ரெட்டி, கருணாகரன், தீபா ஷங்கர், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹம்சினி என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. விரைவில் படம் குறித்த அடுத்தடுத்தஅறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

aishwarya rajesh gauthammenon vikram dhuruvanatchathiram
இதையும் படியுங்கள்
Subscribe