/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/03_44.jpg)
தமிழில் முன்னணிநடிகராக வலம் வரும் விஷால் அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் 'லத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.
இதனிடையே 'நாடோடிகள்' படம் மூலம் பிரபலமான நடிகை அபிநயாவை, விஷால்காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில்தகவல் வெளியானது. இது குறித்து நடிகை அபிநயா தற்போது விளக்கமளித்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மார்க் ஆண்டனி படத்தில் விஷாலின் மனைவியாக அபிநயா நடிப்பதாகவும், அதற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படத்தை சமூக வளைதளத்தில் யாரோ வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளாராம். மேலும் அந்தப் புகைப்படத்தை வைத்து வதந்தி கிளம்பியதாகவும் இதில் உண்மை இல்லை என நடிகை அபிநயா கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us