Advertisment

"போருக்குத் தயார்" - சர்ச்சைக்குப் பிறகு கமல் பட நடிகை பதிவு

actres raveena tandon forest issue

இந்தியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரவீனாதண்டன். தமிழில் 1994ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'சாது', கமலின் 'ஆளவந்தான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள சத்புர புலிகள் சரணாலயத்தில் சுற்றுலா சென்றார். அப்போது புலிகளைப் பார்ப்பதற்காகப் புலிகளின் பக்கத்தில் ரவீனா சென்றுள்ளதாகவும் புலிக்கு இடையூறு செய்யும் வகையில் இது அமைந்துள்ளதாகவும், ஒரு வேலை புலி எதிர்வினை ஆற்றியிருந்தால் என்ன ஆகும் என பலரும் சமூக வலைத்தளத்தில் குற்றம் சாட்டினர். இது தற்போது சர்ச்சையாகி வருகிறது.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை தரப்பில், நடிகை ரவீனா மற்றும் அவருடன் பயணித்த வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக நடிகை ரவீனா தனது ட்விட்டர் பக்கத்தில்,

Advertisment

"அதிர்ஷ்டவசமாக நாங்கள் அங்கு இருந்தபோது புலி எந்தவித செயலிலும் ஈடுபடவில்லை. வனத்துறையின் லைசென்ஸ் பெற்ற வாகனத்தில் பயிற்சி பெற்ற டிரைவர்களுடன் புலிகளைப் பார்வையிடச் சென்றோம். புலிகள் அடிக்கடி கடந்து செல்லும் சுற்றுலா பாதையில்தான் நாங்கள் சென்றோம். பொதுவாக வாகனங்கள் அருகில் புலிகள் வருவது வழக்கம்தான்" என விளக்கம் அளிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை ரவீனா மீண்டும் தனது சமூக வலைத்தளத்தில், "போருக்குத்தயார்" எனக் குறிப்பிட்டு வனப்பகுதியில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Actress forest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe