கரோனோவால் கஷ்டப்படும் துணை நடிகர்..! உதவி செய்த திரை பிரபலங்கள்! 

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்கு பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் தற்போது கரோனா பீதி காரணமாகப் படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டுவரும் ரேணிகுண்டா, பில்லா 2 உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு நடிகர்கள் விஷால், ஸ்ரீமன், பிரேம் குமார் மற்றும் பூச்சி முருகன் உள்ளிட்ட நடிகர்கள் உதவி செய்துள்ளனர். இதுகுறித்து நடிகர் தீப்பெட்டி கணேசன் வெளியிட்டுள்ள வீடியோவில்...

fsdag

''வணக்கம், நான் தீப்பெட்டி கணேசன் ரேணிகுண்டா படத்தில் நடித்தவர். நான் இந்த கரோனா பிரச்சினையால் மிகவும் பாதித்திருந்தேன். அதை நடிகர் பிரேம் குமார், நடிகர் பூச்சி முருகனிடம் சொல்லி, நடிகர் பூச்சி முருகன் எனக்கு உதவி செய்தார். மேலும் நடிகர் விஷால் மற்றும் என் சினிமா நண்பர்கள் அனைவரும் எனக்குத் தேவையான வீட்டுக்குப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர். இந்த நேரத்தில் உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நடிகர் ஸ்ரீமன் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் எனத் தொலைபேசியில் தெரிவித்தார். அவருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

corona virus theepetti ganesan vishal
இதையும் படியுங்கள்
Subscribe