actor  Zaid Khan speech at Banaras movie promotion event

கன்னடத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் ஜையீத் கான், சோனல் மோன்டோரியோ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பனாரஸ்'. இப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனால் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக படக்குழு ஈடுபட்டு வருகிறது. .

Advertisment

அந்த வகையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜையீத் கான், '' இன்று என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். எனது வாழ்க்கையில் முக்கியமான இரண்டு சக்திகள் இங்கே என்னுடன் உள்ளனர். எனது மூத்த சகோதரர் மற்றும் எனது தந்தையைப் போன்ற தர்ஷன் இங்கே இருக்கிறார். தர்ஷன் தொடக்கம் முதலே எனக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்த தருணத்தில் என்னுடைய தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளிக்கிறேன். அவரை இழிவுபடுத்தும் செயலை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என உறுதியளிக்கிறேன். மேலும் எனது தந்தையினால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன். 'பனாரஸ்' படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்தப் படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்" என்றார்.

Advertisment

மேலும் நடிகர் தர்ஷன் பேசுகையில், ''பனாரஸ் படத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். தொடக்கத்தில் ஜையீத் பணக்கார தந்தையின் மகன் என்றும், திறமை இல்லாதவர் என்றும் நினைத்தேன். ஆனால் படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். மேலும் கதை மற்றும் இயக்கம் சிறப்பாக உள்ளது. அதனால் இந்த படம் நிச்சயமாக மாபெரும் வெற்றியைப் பெறும்'' என்றார்.