Advertisment

மோடி வைத்த அதே கோரிக்கையை வலியுறுத்திய நடிகர் யஷ்

Actor Yash insisted on the same demand as Modi

பிரதமர் மோடி, சில தினங்களுக்கு முன்பு 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அந்த நிகழ்ச்சியில் "கரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் அற்புதமான, வரலாற்றுத் தருணத்தைக் காணப்போகிறோம். வரும் ஆகஸ்ட் 13- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்" என பேசினார்.

Advertisment

இந்நிலையில் பிரபல நடிகர் யஷ் மோடி வைத்த அதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக யஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நம்பிக்கையின் சின்னம், வேற்றுமையில் ஒற்றுமை. இந்தியர்களான நம் அனைவருக்கும் பெருமை. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நமது தேசத்தின் அடையாளமான இந்தியத் தேசியக் கொடியை நம் வீடுகளில் கொண்டு வந்து 2022 ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஏற்றுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Narendra Modi yash
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe