Advertisment

"தமிழ்நாட்டுல பல பேர் கொள்கை இல்லாம இருக்காங்க" - நடிகர் விவேக் தாக்கு 

irumbu thirai.jpeg

vivek

வையம் மீடியாஸ் சார்பாக வி.பி.விஜி தயாரித்து விவேக், தேவயாணி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எழுமின்'. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. மேலும் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஷால், சிம்பு, கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது விழாவில் நடிகர் விவேக் பேசும்போது.... "எனக்கு நல்லது செய்யணும்னு விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோரை கூப்பிட்டேன். ஆனா எல்லாரும் சேர்ந்து என்ன அரசியல்ல கோர்த்து விடுறாங்க. தமிழ்நாட்டுல கொடி தான் பிரச்சினை. பலபேர் கொள்கை இல்லாம இருக்காங்க. எழுமின் வார்த்தை சைனீஷ் மாதிரி இருக்குனு சொல்றாங்க. சிலர் “ஏழுமீன்”னு படிக்கிறாங்க. தமிழ் வார்த்தை கூட தெரியாம இருக்காங்க. சமூகத்தில் விளையாட்டுல திறமை இருந்தும் முன்னேறி வர முடியாம இருக்காங்க. அவங்களுக்கு இந்த படம் சமர்ப்பணம். விஷாலுக்கு பல பிரச்சினை இருக்கு. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல பிரச்சினைக்கு மத்தில வந்திருக்காரு. நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு விஷால், கார்த்தி ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க. இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு இப்போ ட்ரெண்ட்ல இருக்க 3 பேர் வந்திருக்காங்க. எனக்காக வந்த எல்லாருக்கும் நன்றி. அப்போ இருந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கும், என் படத்துக்கும் பல பிரச்சினை வந்தது, ஆனால் இனி அது இருக்காது. விஷால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு முறைப்படுத்தி வருகிறார்" என்றார்.

Advertisment

twitter vivek
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe