vivek

Advertisment

கரோனா காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது தனக்குப்பிடித்த இளையராஜா பாடல்களை பியானோவில் வாசிக்க கற்றுக்கொண்டு, அதற்காக இசைஞானி இளையராஜாவிடமே பாராட்டு பெற்றுள்ளார் நடிகர் விவேக்.

இதைப் பற்றி விவேக் கூறுகையில், “என் மகன் வாசித்த பியானோவில் இசைஞானியின் பாடல்களை வாசிக்கப்பழகினேன். அதில், எனக்கு மிகவும் பிடித்தமானது 'உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்திற்காக இசைஞானி இசையமைத்த 'இதழில் கதை எழுதும் நேரமிது...' பாடல். ராஜா சாரை மரியாதை நிமித்தமாக அவரது புதிய ஸ்டூடியோவில் சந்தித்தேன். அப்போது புத்தர் புகைப்படம்ஒன்றை நினைவுப் பரிசாக அவருக்கு அளித்தேன். பின் அவருடன் உரையாடுகையில், உங்கள் இன்ஸ்பிரேஷனில்தான் நான் பியானோ வாசிக்க கற்றுக்கொண்டேன் என்று கூறி நான் வாசித்த 'இதழில் கதை எழுதும் நேரமிது...' காணொளியைக் காண்பித்தேன். அதைப் பார்த்துவிட்டு அவர் பாராட்டினார்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தான் ஒரு பியானோ வாங்கியுள்ளதாகவும், அடுத்த சந்ததியினர் இளையராஜாவை நினைவுகூர வேண்டும் என்பதற்காக அவரது புகைப்படத்தையும் ஆட்டோகிராஃபையும் அதில் பதிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார்.

Advertisment

அதைக் கேட்ட இளையராஜா, விவேக்கின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக தன்னுடைய புகைப்படத்தில் ‘இறையருள் நிறைக’ என்று எழுதிக் கையெழுத்திட்டு விவேக்கிடம் கொடுத்துள்ளார். நடிகர் விவேக், இளையராஜாவின் கையெழுத்து மற்றும் புகைப்படத்தை விரைவில் தன்னுடைய பியானோவில் பதிக்க உள்ளார்.