Advertisment

நடிகர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த நடிகர் விவேக்!

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது.

Advertisment

vivek

இந்நிலையில் சினிமாத்துறையில் பணியாற்றும் தினக்கூலிப்பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அதேபோல நடிகர் சங்கமும் நலிந்த நடிகர்கள், நாடக கலைஞர்களுக்கு உதவுமாறு நடிகர் நாசர் வேண்டுகோள் வைத்தார்.

Advertisment

இந்நிலையில், நடிகர் விவேக் நடிகர் சங்கத்திற்கு ரூ.3.5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். மேலும் 100 மூட்டை அரிசியும் வழங்குகிறார். இதுபோல் நடிகர் பசுபதி, நடிகை குட்டி பத்மினி ஆகியோரும் தலா ரூ. 15 ஆயிரம் வழங்கி உள்ளனர்.

vivek
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe