Advertisment

“மண்ணை மிதித்தவனைக் கைவிடாது சென்னை”- நடிகர் விவேக் நம்பிக்கை!

vivek

கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தினசரி தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கனிசமாக 1500க்கு மேல் வருகிறது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்டோர் என்று பார்த்தால் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

Advertisment

முன்னதாக ஐந்தாம் கட்ட ஊரடங்கிற்கு முன்பாக ஒருசில தளர்வுகளுடன் வெள்ளித்திரை இறுதிக்கட்ட பணிகளுக்கும், 60 பேர்களுடன் சின்னத்திரை ஷூட்டிங் நடத்தவும் தமிழக அரசு அனுமதி வழங்கியது.

Advertisment

ஆனால், சென்னையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையவில்லை. அதானால் தளர்வுகளை நிறுத்திக்கொண்டு மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவைக் கொண்டுவர இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை அருகிலுள்ள 4 மாவட்டங்களுக்கு ஜூன் 19-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சில தளர்வுகள் இருந்தாலும், இரண்டு ஞாயிற்றுக்கிழமை எந்தவொரு தளர்வும் இல்லாமல் முழுமையான ஊரடங்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடுமையான பாதிப்பில் இருக்கும் சென்னை விரைவில் மீளும் என்று நம்பிக்கையுடன் நடிகர் விவேக் ட்வீட் செய்துள்ளார். அதில், “எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையைப்பார்க்கிறார்கள். பரவல் அதிகமாகக் காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி, இனத்தோர் கலந்துள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனைக் கைவிடாது சென்னை. அது மீளும்; வாழும்!". என்று தெரிவித்துள்ளார்.

Chennai actor Vivek
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe