actor vishnu vishal joins ravi teja new film

Advertisment

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகஜால கில்லாடி', 'எஃப்.ஐ.ஆர்' ஆகிய படங்களின் பணிகள் நிறைவுற்று ரிலீசிற்குதயாராகவுள்ளன. இப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷால் 'களவு' படத்தை இயக்கியஇயக்குநர் முரளி இயக்கும் 'மோகன் தாஸ்' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதனைநடிகர் ரவிதேஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.