சூரி தொடர்ந்த மோசடி வழக்கு; விசாரணைக்கு ஆஜரான விஷ்ணு விஷால் 

Actor Vishnu Vishal and his father appeared soori fraud case

சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி முன்னாள் டி.ஜி.பி.யும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் நடிகர் சூரி புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி ஆறு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகிய இருவர் மீதும் சென்னைமத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில்விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலாஆகிய இருவரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகினர். அதில் இருவரும் தங்கள் தரப்பு வாதங்கள் தெரிவித்ததாகவும், இறுதியில் எங்கள் மீதும் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளதாக போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

actor soori vishnu vishal
இதையும் படியுங்கள்
Subscribe