/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vishal_69.jpg)
தமிழ் சினிமாவில் அரிமா நம்பி படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமான ஆனந்த் சங்கர் இருமுகன், நோட்டா ஆகிய படங்களைஇயக்கியுள்ளார். இப்படங்களின்வெற்றிகளைத் தொடர்ந்துநடிகர் விஷாலை வைத்து 'எனிமி' திரைப்படத்தைஇயக்கியுள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவி நடிக்கஆர்யா வில்லனாக நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன்இசையமைத்துள்ள இப்படம்தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் நடிகர் விஷால் தன்னுடையவேண்டுதலை நிறைவேற்ற திருப்பதி சென்றுள்ளார். கீழ் திருப்பதி வரை சென்ற அவர் அங்கிருந்து மேல் திருப்பதி வரை நடந்தே சென்று பெருமாளை தரிசித்துள்ளார். நடிகர் விஷால் கடந்த ஆண்டே இந்த வேண்டுதலை நிறைவேற்ற இருந்ததாகவும் கரோனாபரவல் காரணமாக வேண்டுதல் தள்ளி போனதால் இப்போது அந்த வேண்டுதலை நிறைவேற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)