Advertisment

"உலகம் அழியப்போகிறது என்று ஆர்யாவிடம் சொன்னால் இதைத்தான் சொல்லுவான்" - நடிகர் விஷால் ஜாலி பேச்சு!

vishal

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. விஷால், ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்நிகழ்வில் நடிகர் விஷால் பேசுகையில், "என்னுடைய நல்ல நண்பர் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், கன்னட திரைப்பட உலகத்திற்கும் எனது ஆழ்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

நீண்ட நாட்கள் கழித்து பத்திரிகை நண்பர்களான உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. எனிமி தீபாவளிக்கு வருகிறது. ஒவ்வொரு நாளும் நான் வீட்டுக்குச் சந்தோஷமாகப் போகிறேன் என்றால் அதற்கு இந்த தயாரிப்பாளர் வினோத்குமார்தான் காரணம். எனக்கு ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவர் பணத்தை மனதில் வைத்து படம் தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் இந்தப் படத்தை ஓடிடிக்கு பெரிய விலைக்கு விற்றிருக்கலாம். ஆனால் ரசிகர்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமெனப் படத்தை தியேட்டருக்குக் கொண்டு வந்ததற்கே அவரை வணங்க வேண்டும். அவருடன் அடுத்து ஒரு படத்திலும் இணைகிறேன். ஆனந்த் சங்கர் ஈகோ இல்லாத ஒரு மனிதர். அவர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது இந்தக்கதையில் ஜாமி (ஆர்யா) இருந்தால் நன்றாக இருக்கும்; அவரது பாத்திரத்தை இன்னும் வலுவாக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அற்புதமான திரைக்கதையுடன் வந்தார். அவரது கற்பனைதான் இந்தப்படம்.

ஆர்யாவிடம் உலகமே அழியப்போகிறது என்று சொன்னால், அசராமல் இரு சைக்கிளிங் முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்வார். எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளமாட்டார். இப்போது என்னவென்று தெரியவில்லை திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்தப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கும் போது, அப்போது தான் சர்பாட்டா நடித்துவிட்டு வந்தார். உண்மையிலேயே பாக்ஸிங் கற்றுக்கொண்டு வந்து என்னை அடி வெளுத்துவிட்டான். ஏற்கனவே அவருடன் அவன் இவன் படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப்படமும் சூப்பராக இருக்கும். இன்னும் 10 வருடம் கழித்துப் பார்க்கும் போதும் இதே ரசனையோடு இருக்கும். அவனுடன் இணைந்து மீண்டும் படம் நடிக்க காத்திருக்கிறேன்.

மிருணாளினி நன்றாக நடித்திருக்கிறார். அடுத்தமுறை, தயக்கமில்லாமல் நீங்கள் நடிக்கலாம். கருணாகரன் உடன் நடிக்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. அவர் நடிக்கும்போது நானும் மிருளானியும் சிரித்துக் கொண்டே இருப்போம். ஒளிப்பதிவில் ஆர்.டி. ராஜசேகர் சார் அசத்தியிருக்கிறார். தமனின் பாடல்களும் , சாம்.CS பின்னணி இசையும் மிரட்டல். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் மிக அருமையாக செட் போட்டிருக்கிறார். 600 தியேட்டருக்கு மேல் தெலுங்கானா ஆந்திராவில் இப்படம் வெளியாகப்போகிறது. மிகப் பிரமாண்டமாக வெளியாகும் இப்படம், நீங்கள் திரையில் ரசித்துப் பார்க்கும் படமாக இருக்கும். படத்தில் முதல் பத்து நிமிடங்கள் நானும் ஆர்யாவும் இருக்க மாட்டோம். இரண்டு சின்ன பையன்கள் நடித்திருக்கிறார்கள் அவர்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அட்டகாசமாக நடித்துள்ளார்கள்" எனக் கூறினார்..

actor vishal enemy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe