நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘சூர்யா 40’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க, இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘சூர்யா 40’ படத்தின் வில்லன் நடிகர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நடிகர் வினய் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகர் வினய், மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘துப்பறிவாளன்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.