/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/269_1.jpg)
'காக்காமுட்டை' படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மணிகண்டன், 'ஆண்டவன் கட்டளை' படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி, யோகி பாபு, பசுபதி உள்ளிட்ட பலரைவைத்து கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு, ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில்கடைசி விவசாயி படம் பார்த்த நடிகர் விமல் வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட ட்விட்டர் பதிவில், "கடைசிவிவசாயி பார்த்தேன். அய்யா நல்லாண்டி கடைசி விவசாயியாகவே வாழ்ந்திருந்தார். நண்பன் சேதுவின் நடிப்பை பார்க்கும்போது.. அதில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள தோன்றுகிறது. திரைக்கதை , ஒளிப்பதிவு , இயக்கம்.. உலகத்தரத்தில் இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
#கடைசிவிவசாயி பார்த்தேன். அய்யா நல்லாண்டி கடைசி விவசாயியாகவே வாழ்ந்திருந்தார். நண்பன் சேதுவின் நடிப்பை பார்க்கும்போது.. அதில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள தோன்றுகிறது. திரைக்கதை , ஒளிப்பதிவு , இயக்கம்.. உலகத்தரத்தில் இருந்தது.@VijaySethuOffl@vsp_productionspic.twitter.com/pOpKntFgPb
— Actor Vemal (@ActorVemal) March 12, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)