"வீட்ல சும்மா இருந்த நான் ஹீரோ, ஃபிளாப் கொடுத்தவன் இயக்குநர்" - மேடையில் கலாய்த்த விமல் 

actor vimal talk about vilangu web series

‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட பல படங்களில் நடித்த விமல், கடைசியாக ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குநர் பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் ’விலங்கு’ என்ற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். இதில் இனியா, முனீஷ்காந்த் பாலா சரவணன்,ஆர்.என்.ஆர் மனோகர் உள்ளிட்டோர்முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் பிப்ரவரி 18 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் விமல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் பேசியவிமல், "மைக் முன்னாடியேபல வருஷம் கழிச்சு நிக்கிறேன். விலங்கு முதலில் படமாக தான் உருவாகியிருந்தது. ஆனா படத்தோட கண்டென்ட் அதிகமாக அதிகமாக படத்தின் கதையை 2.30 மணி நேரத்திற்குள் சொல்ல முடியாது என்பதால் வெப்சீரிஸாகபண்ணா நல்லா இருக்கும்னு முடிவெடுத்தோம்.நானும் சினிமாவுக்கு வந்து 12 வருடம் ஆச்சு ஒரு வெப் சீரிஸ் பண்ணனும், அதோட அனுபவம் எப்படி இருக்குன்னு பார்க்க பண்ணேன். அதுவும் ரொம்ப நல்லா வந்திருக்கு. அக்கா சொன்ன மாதிரிகாதல் சட்டையில் இருந்து, காக்கி சட்டைக்குமாறிய புது விமலைநீங்க 'விலங்கு' வெப் சீரிஸில் பார்க்கலாம்" என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மேடையில் இருந்த படக்குழுவினரை கலாய்த்த விமல்,"இந்த படத்துலவந்து எனக்கும் 3 வருஷமா படம் இல்ல. வீட்ல சும்மா உக்காந்து இருக்கேன். நான் கதாநாயகன், மதன் ஜேம்ஸ்கொடிகட்டிபறந்தாருஅவரும்3 வருஷம் ஆஃபீஸ்ல சும்மா உக்கார்ந்து இருக்கார். அவரு ப்ரொடியூசர், ஒரு படத்தை எடுத்து ஃப்ளாப் கொடுத்தான் பிரசாந்த், அவன் இயக்குநர். கேக்கவே எப்படி இருக்கு. இந்த மூணு போரையும்நம்பி ஜி5 இந்த வேலையைகொடுத்ததுக்குஅவர்களைதான் பாராட்ட வேண்டும்" எனக் கிண்டலடித்துள்ளார்.

tamil cinema vimal
இதையும் படியுங்கள்
Subscribe