vimal

Advertisment

தமிழ் திரைப்பட நடிகரான விமல் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் கன்னிராசி. கலவையான விமர்சனங்களைப் பெற்று, திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விமல் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தை மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்கார வடிவேலன் தயாரிக்கிறார். '1 பந்து 4 ரன் 1 விக்கெட்' படத்தின் இயக்குனரான வீரா இயக்கும் இப்படம், 'ஹாரர்' வகை திரைப்படமாகும். மேலும், இப்படத்தை ஒரே ஷாட்டில் படமாக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார். இதனால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜனவரியில் தொடங்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக, படக்குழு முழுவீச்சில் தயாராகி வருகிறது.