actor vimal next with director virumandi

நடிகர் விமல், 'விலங்கு' வெப் சீரிஸின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியின் 'டிஎஸ்பி' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதனிடையே பல படங்கள் இவரது நடிப்பில் உருவாகி சில காரணங்களால் ரிலீஸாகாமல் உள்ளது. இப்போது புதுமுக இயக்குநர் மைக்கேல் இயக்கும் படம், போஸ் வெங்கட் இயக்கத்தில் 'மா.பொ.சி' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார்.

Advertisment

இந்த நிலையில், விமல் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் சேதுபதியை வைத்து 'க/பெ ரணசிங்கம்' படத்தை இயக்கிய விருமாண்டி இயக்கத்தில் ஒரு படத்தில்நடிக்கவுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என விமல் தெரிவித்துள்ளார்.

Advertisment

சமீபத்தில் விமல் பற்றி பல தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தது. நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளதாகவும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டிலேயே ரகசிய சிகிச்சை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் அது வெறும் வதந்தி தான் என விளக்கமளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.