/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/185_7.jpg)
தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் தன் அர்ப்பணிப்பான நடிப்பை கொடுப்பவர்களில், இன்றைய காலகட்டத்தில் முக்கியமாக பார்க்கப்படுபவர் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' படத்தில் மற்றும் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடித்துள்ளார். இதில் 'கோப்ரா' படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதியும், 'பொன்னியின் செல்வன்' படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே 'பொன்னியின் செல்வன்' படத்தில் இவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இப்படத்தின் டீசர் இன்று மாலை (08.07.2022) 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர் விக்ரமிற்கு இன்று மதியம் 2.30 மணியளவில் திடீரென மாரடைப்புஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் விக்ரம் குணமடைய ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தற்போது பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)