actor vikram waits for pa ranjith movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'மகான்' படத்தில் நடித்திருந்தார். கடந்த 10 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையேபெற்று வருகிறது. இதனிடையே நடிகர் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கும்'கோப்ரா', மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்'உள்ளிட்ட படங்களில்நடித்து வருகிறார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="732dd525-5e73-4dc2-94ab-c6497a7e46b5" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_26.jpg" />

Advertisment

இப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைஸ்டூடியோக்ரீன்நிறுவனம் சார்பில் கே.இஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை 'மெட்ராஸ்' படத்தை இயக்கும் போதேஇயக்குநர் பா.ரஞ்சித் விக்ரமிடம் கூறிவிட்டதாகவும், அதற்கு அவரும் ஓகே சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குநர் பா.ரஞ்சித் 'மெட்ராஸ்' படத்தை தொடர்ந்து 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' ஆகிய படங்களைஇயக்கியதால்விக்ரம் படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. 'நட்சத்திரம்நகர்கிறது' படத்தில் கவனம் செலுத்தி வரும் ப.ரஞ்சித் அடுத்ததாக 'சியான் 61' படத்தின் பணியில் ஈடுபடவுள்ளார். மேலும் இப்படத்திற்காக நடிகர் விக்ரம் 8 வருடங்களாக காத்திருந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.