Advertisment

ராஜமௌலி படத்தில் வில்லனாக நடிக்கும் விக்ரம்

actor vikram play antagonist role in rajamouli movie

இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7 ஆம்தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி அடுத்ததாகப் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் மகேஷ் பாபுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

நடிகர் விக்ரம்தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் மகான், அஜய் ஞானமுத்து இயக்கும்கோப்ரா, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

RRR mahesh babu ss rajamouli actor vikram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe