தோனியுடன் விக்ரம் திடீர் சந்திப்பு... வைரலாகும் புகைப்படம்

actor vikram meets ms dhoni

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ளபடம் 'மகான்'. விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள இப்படத்தின் டீசர் நேற்று (31.1.2022) வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம்பிப்ரவரி 10ஆம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் விக்ரம் இந்தியகிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை நேரில் சென்று சந்தித்துள்ளார். ஐ.பி.எல் மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13ஆம் தேதிகளில்பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களைஏலத்தில் தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசிக்க சென்னை வந்த தோனியைநடிகர் விக்ரம் நேரில் சென்று சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor vikram mahaan MS Dhoni
இதையும் படியுங்கள்
Subscribe