/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_50.jpg)
தேமுதிக நிருவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான விஜயகாந்த்(71) கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்பு சிகிச்சை முடிந்து குணமடைந்து கடந்த 11 ஆம் தேதி வீடுதிரும்பிய நிலையில் நேற்று மீண்டும் உடல்நிலைபாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து விஜயகாந்த்நேற்று மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்பு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது வீட்டை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே விஜயகாந்த்தின் மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகினறனர். அந்த வகையில், நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மிகவும் அன்பான மற்றும் அக்கறையுள்ள மனிதரான விஜயகாந்த்காலமானதைக் கேட்டு வருத்தமடைந்தேன். நாங்கள் உங்களை இழந்துவிட்டோம்கேப்டன்” என்று வருத்தமுடன் பதிவு செய்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)