actor vijay tribute puneeth rajkumar

Advertisment

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்தியத் திரைப்பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து புனித் ராஜ்குமார் உடல் காண்டீவராவில் உள்ள அவரது தந்தை சமாதிக்குப் பக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய நிலையில் படப்பிடிப்பின் காரணமாக பல நடிகர்கள் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து விஜய் சேதுபதி, விஷால், உதயநிதி ஸ்டாலின் கமல் உள்ளிட்ட நடிகர்கள் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய நிலையில்தற்போது நடிகர் விஜய் புனித் ராஜ்குமார் சாமத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் பிசியாகஇருந்ததால் நடிகர் விஜய் இன்று (26.2.2022) புனித் ராஜ்குமாரின்சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.