சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், விஜய் மக்கள் இயக்க அகில இந்திய செயலாளர் ரவிராஜா மற்றும் துணைச் செயலாளர் குமார் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து, இவர்கள் இருவரையும் வீட்டைக் காலி செய்து வெளியேறும்படி விஜய் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நேரத்திற்குள் அவர்கள் வீட்டைக் காலி செய்யாததால், நடிகர் விஜய் தரப்பு தற்போது போலீஸ் உதவியை நாடியிருக்கிறது. இது குறித்தான விசாரணையை விருகம்பாக்கம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.